17 ம் திகதி முதல் 23 ம் திகதி வரையிலான ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசி

சுபலன்கள் குறைந்து காணப்படுகிறது,தொழில் மந்த நிலை, வீண் செலவு ஏற்படும்,அவதானமாக இருப்பது நன்மையாகும்.

இடப ராசி

நன்மை தீமை கலந்தே காணப்படுகிறது,வரவிற்கு ஏற்ப செலவு காணப்படும், மனதில் சஞ்சலம் இருந்தாலும் குடும்பத்தில் சந்தோசம் நிலவும்

மிதுன ராசி

சுப பலன்கள் குறைந்து காணப்படுகிறது.வீண் செலவு அலைச்சல் ஏற்படும்,இந்தக் காரியத்திலும் அவதானமாக இருப்பது நன்மையாகும். கடகராசி நற்பலன்கள் குறைந்து காணப்படுகின்றது.காரியத்தடை, மனச் சஞ்சலம் ஏற்படும்.உடல் ஆரோக்கியத்தில் மிக அவதனாக இருப்பது நன்மையாகும்.

சிம்மராசி

நற்பலன்கள் உள்ள வரமாகும்.வியாபாரத்தில் லாபம்,குடும்பத்தில் சந்தோசம், மன மகிழ்ச்சி ஏற்படும். கன்னிராசி நன்மை தீமை கலந்து காணப்படும்,தொழில் மந்த நிலை, தேக ஆரோக்கியம் பாதிப்படையும்,குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

துலாம் ராசி

முற்பகுதியில் சுபலன்கள் குறைந்து காணப்படுதல் பிற்பகுதியில் நற்பலன்கள் ஏற்படும்,பொருளாதாரம் சமநிலையில் இருக்கும். விருச்சிக ராசி செலவு அதிகரித்து காணப்படும், தெய்வ காரியங்களில் ஈடுபடுதல்,குடும்பத்தில் சுபநிகழ்ச்சி மூலமான செலவுகள் அதிகரிக்கும்

தனுசு ராசி

சுபலன்கள் குறைந்து காணப்படுகிறது,உடல் நலக்குறைவு ஏற்படும்,வைத்திய செலவு , வீண் அலைச்சல் போன்றன ஏற்படும்,இந்த வாரத்தின் பிற்பகுதி வரை அவதானமாக இருப்பது நன்மையாகும்.

மகர ராசி

நற்பலன்கள் நடைபெறும்,இடை இடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் சுப பிரயாணங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். கும்பராசி உடல் நலம் சிறிது பாதித்தாலும் தொழில் ,வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவு ஏற்படும்

மீன ராசி

நற்பலன்கள் குறைந்து காணப்படுகிறது.எடுத்த காரியங்கள் தடைப்படுதல்,மன சஞ்சலம் செலவு அதிகரிக்கும்,பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நன்மை.

17ம் திகதி முதல் 23ம் திகதி வரையிலான எண்களுக்கான பலன்கள்

எண் 1

நற்பலன்கள் உள்ள வாரமாக இருக்கும்,குடும்பம்பத்தில் சந்தோசம் நிலவும்,பத்தொன்பதாம் திகதி அதிஷ்ட நாளாகும். பதினேழாம் திகதி மட்டும் அவதானம் இருக்கவும்.

எண் 2

நற்பலன்கள் சம அளவில் கணபப்டும், தொழில் முன்னேற்றம் அடையும்,பச்சை நிற ஆடை அதிஷ்டத்தை தரும், பதினெட்டாம் திகதி அவதானம் இருக்கவும்.

எண் 3

நற்பலன்கள் நிறைந்து காணப்படும், செய்யும் காரியங்கள் தடையின்றி நிறைவேறும்,குடும்பத்தில் சந்தோசம் நிலவும்

எண் 4

நற்பலன்கள் அதிகரித்து காணப்படும்,குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிறைவேறும்,பத்தொன்பதாம் திகதி அதிஷ்ட நாளாகும்.நீல நிற ஆடை மேலும் நன்மை தரும்.பதினேழாம் திகதி மட்டும் அவதானக இருக்கவும்.

எண் 5

நற்பலன்கள் உள்ள வாரமாகும்,தொழில் வியாபாரம்,நன்றாக இருக்கும், பதினெட்டாம் திகதி அவதானமாக இருக்கவும், பச்சை நிற ஆடை நன்மை தரும்.

எண் 6

நன்மை தீமை கலந்த வாரமாகும்,செலவு அதிகரிக்கும்,குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்,ஒரேன்ஜ் நிற ஆடையை தவிர்க்கவும் .

எண் 7

இந்த வாரம் நன்மை தரும் வாரமாகும்.வருமானம் நன்றாக இருக்கும்,இருபதாம் திகதி அதிஷ்டமாக இருக்கும், பச்சை நிற ஆடை மேலும் நன்மை தரும்,பதினெட்டாம் திகதி மட்டும் அவதானம் இருக்கவும்.

எண் 8

நன்மையும் தீமையும் கலந்து காணப்படும், வரவிற்கு ஏற்ப செலவு ஏற்படும். உடல் நலத்தில் கவனமாக இருப்பது அவசியம். இருபத்து மூன்றாம் திகதி அதிஷ்ட நாளாகும்.

எண் 9

நற்பலன்கள் இருந்தாலும் வீண் அலைச்சல் ஏற்படும், வேலைகள் அதிகரித்து காணப்படும்,வீண் அலைச்சல் ஏற்படும். நீல நிற ஆடை நன்மை தரும்