சம்பந்தனை திட்டியவர்கள் யார்?? சிக்கியது ஆதாரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சில அரசியல்வாதிகளின் அடி வருடிகளே கெளரவ சம்பந்தன் ஐயாவை அவமதித்தனர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தலைமை தாங்கிய கெளரவ ரவிகரன் மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாந்தி ஆகியோரின் திட்டமிட்ட செயல் என நம்பப்படுகிறது.

கெளரவ சம்பந்தன் ஐயாவை அவமதிப்பில் ஈடுபட்ட இருவர் கெளரவ சாந்தி அவர்களின் எற்பாட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் இவர்கள் தான். இவர்கள் கட்சி உறுப்பினர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2016 முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்விலும் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.

அதேபோல் ஒரு பிரபல பாடசாலையின் விழா ஒன்றுக்கு கெளரவ சாந்தி அவர்கள் அழைக்கப்பட வேண்டும் என வற்புறுத்தியவர்களும் இவர்களே. பின்பு அவரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு அழைப்பிதல் அச்சிட்ட போது, இல்லை அவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பொய் பிரச்சாரம் செய்தவர்கள் இவர்கள்தான்.

இது மட்டுமா முல்லைத்தீவில் காந்தி சிலை உடைப்பு,காந்தியை அவமதிக்கவும் தொடர்ந்து கெளரவ ரவிகரன் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டவர்களும் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாக்கம்

Peter Ilancheliyan