வவுனியாவில் ஏழு தமிழர்களின் பதவி பறிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நினைவுச் சுடர் ஏற்றிய தமது ஊழியர்களை நிறுவனம் ஒன்று பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.

வவுனியா கண்டி வீதியிலுள்ள மோட்டார் உதிரிப்பாகங்கள், வாகனம் பழுதுபார்க்கும், வாகனப்பாகங்களை விற்பனை செய்யும் பெரும்பான்மை இனத்தவர் தனது வியாபார நிலையத்தில் பணியாற்றிய தமிழ் இளைஞர்களை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்.

நேற்று மாலை 5.50 மணியளவில் குறித்த இளைஞர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்து பொதுமக்களை நினைகூர்ந்து நினைவுச்சுடரினை வியாபார நிலையத்தில் ஏற்றியுள்ளனர்.

இதையடுத்து இன்று வியாபார நிலையத்திற்குச் சென்ற வியாபார நிலைய உரிமையாளர் தமிழ் இளைஞர்களான வவுனியா, மீசாலை, விஸ்வமடு, மன்னார், வீரபுரம் பரந்தன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 7பேர் பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளார்.

குறித்த நிறுவனத்தில் 14ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்று பொலிசார் குறித்த வியாபார நிலையத்திற்குச் சென்று சமரசத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.