அஜித்தை நெருங்கும் அதிமுக!! அதிர்ச்சியில் திமுக..

நடிகர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக அமைச்சர்களிடையே ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைந்து துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளதாக புகார் தெரிவித்து இருந்தார். இது தமிழக அமைச்சர்களை கொதிப்படைய செய்தது.

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தங்களது கருத்துகளை ஊடங்களில் வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஜனநாயக ரீதியில் கருத்து சொல்லும் நடிகர் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டுவது கண்டனத்திற்குறியது என தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் திமுக ஆட்சியில் முதல்வர் விழாவுக்கு வர நடிகர்கள் மிரட்டப்பட்டதாக அஜித் பகிரங்கமாக புகார் தெரிவித்தபோது நடிகர் கமல்ஹாசன் ஏங்கே சென்றார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கெனவே நடிகர் அஜித் அதிமுகவில் இணையபோவதாக வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டது. இந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர் ஒருவரே கருத்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.