பாஜகவின் அதிரவைக்கும் வியூகம்

பாஜகவின் அதிரவைக்கும் வியூகம்

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சி சார்பில் மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் கோபால் கிருஷ்ணன் காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் 5–ந் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பா.ஜனதாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளார்.

இன்று மாலை நடைபெறும் பாரதீய ஜனதா கட்சியின் உயர் மட்டகுழு கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் இந்தியாவில் பா.ஜனதாவிற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக வெங்கையா நாயுடுவை களமிறக்கலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் பிரதமர் மோடி அவரை அமைச்சரவையில் விடுவிப்பாரா என்ற கேள்வியும் உள்ளது.

இதுதொடர்பாக வெங்கையா நாயுடு பேசுகையில், எந்தஒரு விஷயத்திலும் நான் போட்டியில் கிடையாது என்றும் இது குறித்து கட்சியின் பாராளுமன்ற குழுதான் முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.