கருணாநிதியின் சந்திப்பு குறித்து மனம் திறந்தார் சரத்குமார்!

எம்.ஜி.ஆர் இறந்த பின்னர், எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி தான் என, நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியில் நேற்று இடம்பெற்ற, சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர்,

“எனக்கு அரசியலை நன்றாக கற்றுக் கொடுத்தவர் என்பதால், அண்மையில் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தேன். இந்த சந்திப்பு தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான எண்ணத்தோடு அல்ல, சாதரணமனதே.

தமிழகத்தில் தற்போது நடத்தப்படும், வருமான வரித்துறையினரின் அதிரடிச் சோதனையை, ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, மத்திய அரசு நடத்தியிருக்க வேண்டும்.

இலவச திட்டங்களை கொடுத்து, மக்களை கெடுத்துவிட்டார்கள். தற்போது அரசை குறை சொன்னால் படம் நன்றாக ஓடும்.

ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரயில் விடுவதிலும் பார்க்க, அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்.

அத்துடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது பேசாத அமைச்சர்கள், தற்போது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் முரணாக கருத்துக்களை தெரிவித்து வருவதால், மக்கள் ஏளனமாக பேசுகின்றனர்.

எனவே அமைச்சர்கள் பேசும் போது, தங்கள் கருத்துக்களை ஆராய்ந்து பேச வேண்டும்.” என நடிகர் சரரத்குமார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.