நீதிபதியின் மகள் காவலநிலையத்தில் புகார்!

வேலூர் மாவட்ட நீதிபதியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், தனக்கும் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறி, போலீசாரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் சார்பு நீதிபதியாக இருப்பவர் அசீம். கடந்த வாரம் இவரது மகள் தமீம், பெல்காந்தி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சார்பு நீதிபதி அசீம் தன் மகளையும் அவரது கணவரையும் மற்றும் அவர் குடும்பத்தினரையும் அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தந்தையினால் எங்கள் அனைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பளாரிடம் நீதிபதியின் மகள் கோரிக்கை மனு அளித்தார்.

நீதிபயின் மகளே இவ்வாறு மனு கொடுத்துள்ளதால், மக்கள் மத்தியில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.