Google I/O 2017 நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ள 5 நவீன அம்சங்கள்...!!

Google CEO சுந்தர் பிச்சை,google I/O 2017 நிகழ்வின்போது 5 முக்கியமான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளார். இதில் google Android O என்ற ஓ.எஸ் இப்பொது பயனாளர்களின் கருத்துக்களை அறிய சோதனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் கேமரா தெளிவு அற்புதமாக உள்ளது என்றும். அதிவேகமாக பயன் படுத்தலாம் என்றும். வழிசெலுத்தலை எளிதாக்குதல் போன்ற முதன்மை சிறப்புகளை தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, google lens என்ற ஆப் பற்றியும் பகிர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை, ஒரு பொருளின் விவரங்கள் அறிய அந்த பொருளை ஸ்கேன் செய்வதன்மூலம் அப்பொருளின் முலு விவரங்களும் தொலைபேசி திரையில் டிஸ்பிலே ஆகும். கடவுச்சொல், பயனர்பெயர் அறியாமல் wifi router-ல் உள்ள பார்கோடு மூலமாக ஸ்கேன் செய்து இணையத்தை பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாமல் ஒரு இடத்தின் முலு விவரங்கள் அறிய பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தினார்.

மூன்றாவதாக, google "day dream" VR என்ற ஹெட் செட்டை விரைவில் அறிமுகம்செய்யவுள்ளதாகவும், இந்த செய்தியை கேட்ட மற்ற நிறுவனங்கள் அவர்களும் இது போன்ற VR ஹெட் செட்டை அறிமுகம் படுத்துவதாக செய்திகள் வெளிப்படுத்தியுள்ளது. google "day dream" VR-யை தற்போது சாம்சங்குடன் ஒப்பிட கூடாது ஆனால் google-லின் VR ஹெட் செட் நவீன அம்சம் உடையது என்று சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

நான்காவதாக ஆப்பிளில் இருக்கும் siri போல தற்போது google nexus-யில் இயங்கிவரும் google அசிஸ்டன்ட், இனி அனைத்து IOS சாதனங்களிலும் பயன்படுத்த இயலும்.

ஐந்தாவதாக, 512 எம்.பி-இல் இருந்து 1 ஜி.பி-க்கு உள்பட்ட ரேம் உள்ள மொபைலில் செயல்பட android go எனும் ஓ.எஸ்-ஐ வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் ஏழ்மையான மக்கள் அனைத்து நவீன அம்சங்களையும் குறைந்த விலையில் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தவுள்ளார்.