வெள்ளவத்தை கட்டிடம் இடிந்து விழும் சி.சி.ரீ.வி காணொளி

கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பான சி.சி.ரீ.வி. கானொளி வெளியாகியுள்ளது.

குறித்த கானொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு பின்புறமாக அமைந்துள்ள தி என்சலன்ஸ் என்ற 5 மாடிக் கட்டிடம் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் இடிந்து விழுந்தது.

விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் 14 பேர் களுபோவில வைத்தியசாலையிலும் ஏனைய 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றைய தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.