விக்கியின் அணியில் இணைந்தார் கருணா

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவிருந்தது.

இதில் பேசிய கருணா வடக்கு முதலவர் சீ.விக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதுடன் அவரிற்கு நாம் என்றும் ஆதரவு என கருத்து தெரிவித்துள்ளார்.

இவருடன் இணைந்து வட - கிழக்கின் அனைத்து ஆயதக் குழுக்களும் சீ.வியை ஆதரிக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

வெகு விரைவில் கருணா - விக்கி சந்திப்பு இடம் பெறலாம் என கூறப்படுகிறது.