இலங்கைப் பெண்ணிற்கு ஓமானில் 36 லட்­சம் ரூபா! காலம் கடந்த அதிஸ்ரம்

advertisement

ஓமா­னில் 13 வரு­டங்­க­ளும் 9 மாதங்­க­ளும் வீட்­டுப் பணிப்­பெண்­ணா­கத் தொழில் புரிந்த இலங்கைப் பெண்­ணுக்­குக் கிடைக்க வேண்­டிய சுமார் 36 லட்­சம் ரூபா சம்­பள பணத்தை மஸ்­கட் நக­ரில் உள்ள இலங்­கைத் தூத­ர­கம் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

பாணந்­துறை மொர­வின்ன பிர­தே­சத்தை சேர்ந்த 60 வய­தான நளினி பெர்­னாண்டோ என்ற இரண்டு பிள்­ளை­க­ளின் தாயா­ருக்கு இந்த சம்­ப­ளப் பணம் கிடைத்­துள்­ளது.

இந்­தப் பெண் கடந்த 2001ம் ஆண்டு முதல் ஓமா­னின் மஸ்­கட் நக­ரில் இருந்து 300 கிலோ மீற்­றர் தொலை­வில் உள்ள ஜாலன் பானி என்ற பிர­தே­சத்­தில் உள்ள ஓமான் குடி­ ம­க­னின் வீட்­டில் பணி­யாற்றி வந்­துள்­ளார்.

ஓமான் குடி­ம­கன் இலங்கை பணிப் பெண்ணை தனது வீட்­டில் தங்க வைத்து விட்டு தனது மனைவி பிள்­ளை­க­ளு­டன் வெளி­நாடு சென்­றுள்­ளார்.

எனி­னும் வாக்­கு­றுதி வழங்­கி­ய­படி இலங்­கைப் பெண்­ணுக்கு மாதாந்­தம் சம்­ப­ளத்தை அவர் வழங்­க­வில்லை. இத­னைத் தனது முக­வர் மூலம் பெண் இலங்கை தூத­ர­கத் துக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

இத­னை­ய­டுத்து கடந்த 2015ஆம் ஆண்டு ஓமான் பொலி­ஸார் ஊடாக பெண் இலங்­கைத் தூத­ர­கத்­தின் பாது­காப்பு இல்­லத்­தில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அங்கு தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த பெண்­ணுக்­காக உட­ன­டி­யாக தலை­யீ­டு­களை மேற்­கொண்ட ஓமா­னுக்­கான இலங்கை தூது­வர் எம்.கே. பத்­ம­நா­தன் மற்­றும் தூத­ரக அதி­கா­ரி­கள், பெண்­ணின் சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஓமான் பிர­ஜைக்கு எதி­ராக கடந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் அந்­நாட்டு ஆரம்ப நீதி­மன்­றத்­தில் வழக்கு தாக்­கல் செய்­த­னர்.

இலங்­கைப் பெண்­ணுக்கு இல­வ­ச­மாக சட்ட உத­வி­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. வழக்கு விசா­ர­ணை­க­ளில் சம்­ப­ளம் கொடுக்­கா­ததை ஓமான் குடி­ம­கன் ஒப்­புக்­கொண்­ட­து­டன் அவ­ருக்கு மூன்று மாதச் சிறைத் தண்­டனையும் வழங்­கப்­பட்­டுள்ளது.

வழக்கு விசா­ர­ணை­யின் இறுதியில் இலங்கை பெண்­ணுக்கு 13 ஆண்­டு­க­ளுக்கு மேலாக செலுத்த வேண்­டிய சம்­பள பணத்­தில் 30 லட்­சத்தை முத­லில் செலுத்த ஓமான் குடி­ ம­கன் ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

மீத­முள்ள நிலு­வைப் பணத்தை இலங்கை தூத­ர­கம் ஊடாக மாதாந்­தம் 60 ஆயி­ரம் ரூபா வீதம் பெண்­ணின் வங்­கிக் கணக்­கில் வைப்­புச் செய்­ய­வும் அவர் இணங்­கி­யுள்­ளார்.

பெண்­ணின் சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுக்க இலங்கை தூது­வர் உட்­பட தூத­ரக அதி­கா­ரி­கள் பெரும் பங்­காற்­றி­யுள்­ள­னர்.