பிள்ளைக்கு சிகிச்சை வழங்க கத்தியை அடகு வைத்த தந்தை!!

வறட்சி காரணமாக தொடர்ந்து 4 சாகுபடி அழிவடைந்து, விவசாயம் செய்ய முடியாமல் ஆதரவற்ற நிலைக்கு உள்ளான நபரொருவர், மன்னா கத்தியை 300 ரூபாவுக்கு அடகு வைத்த சம்பவம் விலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உணவு கூட இன்றி கடும் வறுமை நிலைக்கு உள்ளான அவர், தனது பிள்ளையின் சுகயீனத்திற்கு சிகிச்சை வழங்க மருத்துவமனைக்கு செல்லவதற்கு 800 ரூபாய் பெறுமதியான மன்னா கத்தியை 300 ரூபாவுக்கு அடகு வைத்துள்ளார்.

இவர் கடனுக்கு உணவு பொருட்களை வாங்கி அதனை செலுத்த கூட முடியாமல் கடும் வறுமை நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மன்னா கத்தியை ஒரு வர்த்தகரிடம் தனது இயலா நிலைய கூறி அடகு வைத்துள்ளார்.

எனினும் அடகு பொருள் தேவையில்லை பணத்தை பெற்று செல்லுமாறு வர்த்தகர் கூறியுள்ளார்.

எனினும் அந்த வர்த்தகருக்கு அவர் மீது ஏற்பட்ட கருணையை மதித்து பணத்தை திரும்பி செலுத்தும் வரை கத்தியை வைத்து கொள்ளுமாறு கூறி, தனது பிள்ளைக்கு சிகிச்சை வழங்குவதற்கு பணத்தை பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.