வான்புலிகளின் இரணைமடு ஓடுதளத்தில் தரையிறங்கிய உலங்குவானூர்தி!

வான்புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை தற்பொழுது ஸ்ரீலங்கா வான்படையின் கட்டுப்பாட்டின்கீழ் புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி இரணைமடு விமானத்தளமாக மாற்றம்பெற்றுள்ள இது ஸ்ரீலங்கா வான் படையின் போர் விமானங்கள் தரித்து நிற்பதற்கான தளமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே வான்படையினரின் சிறப்பு உலங்கு வானூர்தியொன்று இன்றைய தினம் இந்த தளத்தில் இறங்கிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

யுத்த காலத்தில் இந்த ஓடுதளத்தைப் பாவித்தே விடுதலைப் புலிகளின் விமானப் படையான வான் புலிகள் அணி, பல தடவைகள் நாட்டின் பல பாகங்களிலுமிருந்த இராணுவத்தின் நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.