இராணுவத்துடன் இணைந்து பல கொலைகளில் ஜனா - சுரேஸ்

சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முதலில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கோவிந்தன் கருணாகரம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினா் கோவிந்தன் கருணாகரத்தினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி விமா்சிக்கப்பட்டுள்ள நிலையில், தருமலிங்கம் சுரேஸினால் இன்று வெளியிட்பபட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“கோவிந்தம் கருணாகரம் (ஜனா) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை விமர்சிப்பதற்கு காரணம் நாங்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக்கொண்டிருக்கும் தரப்பு என்பதனாலேயேயாகும்.

ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை சிங்கள இராணுவத்துடன் இணைந்து கொலை செய்ததுடன் பெரும் எண்ணிக்கையான இளைஞர் யுவதிகளைக் காணாமல் போகச் செய்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக தான் செய்த கொலைகள் கடத்தல்களை மறந்து இன்று தமிழத் தேசியம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பல குடும்ப விதவைகள் இன்றும் இவரால் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.

மோசடி அரசியல் செய்யும் இவர்களை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக் கொண்டு வரப்போகும் தேர்தல்களில் பாடம் கற்பிக்க வேண்டும்” என தருமலிங்கம் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.