எச்சரிக்கை!! வடக்கு கிழக்கு உட்பட இலங்கை மக்கள் இன்றிரவு கவனமாக இருக்கவும்

எச்சரிக்கை!! வடக்கு கிழக்கு உட்பட இலங்கை மக்கள் இன்றிரவு கவனமாக இருக்கவும்

நாட்டின் பல பாகங்களில் இன்று இரவு இடியுடன்கூடிய கடும் மழை பொழியும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் வேளைக்கு முன்னதாகவே அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக தீவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பிறகு இடியுடன்கூடிய மழை அல்லது புயல்காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலும் மேல் மாகாணத்தின் கரையோரப்பகுதிகளிலும் இன்று காலை கன மழை பொழியலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலனறுவை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களத்தினால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்குதல் இடம்பெறக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.