யாழ் விடுதியில் சிக்கிய நால்வர்!! நடந்த ஏமாற்று நாடகம்

யாழ் விடுதியில் சிக்கிய நால்வர்!! நடந்த ஏமாற்று நாடகம்
advertisement

தனியார் விடுதி ஒன்றில் தங்கிவிட்டு வாடகை பணத்தை செலுத்தாமல் தப்பி செல்ல முற்பட்ட 4 இந்தியார்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த சில நாட்களாக இந்தியர்கள் 4 பேர் தங்கியிருந்துள்ளனர்.

நேற்று மாலை 7 மணியளவில் குறித்த விடுதியில் மதுபானம் அருந்தியுள்ளனர்.

பின்னர் சாட்டிப்பகுதியில் உள்ள குறித்த விடுதியின் பகுதி விடுதிக்கு செல்லவுள்ளதாக விடுதி பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அப்போது விடுதி பணியாளர்கள் தமது வாகனத்தில் கொண்டு சென்று விடுவதாக தெரிவித்துள்ளனர்.

அதை மறுத்த இந்தியர்கள், தாமே செல்வதாகவும் வாடகை பணத்தை அங்கு சென்றவுடன் செலுத்துவதாக தெரிவித்து சென்றுள்ளனர்.

அவர்களில் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் குறித்த நபர்களை பின்தொடர்ந்த போது அவர்கள் யாழ் நகரில் இருந்து தென்பகுதி நோக்கி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர்.

இதை பார்த்த பணியாளர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி வரவழைத்து குறித்த நபர்களை அதிகாலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் விடுதிக்கு செலுத்தவேண்டி இருந்ததாகவும் அதை செலுத்தாமல் தப்பி சென்றுள்ளார்கள் என விடுதி முகாமையாளரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணத்தை செலுத்துவதாக தெரிவித்து இந்திய துணைத்தூதரகத்தில் இருந்து வந்த அதிகாரி ஒருவர் குறித்த சந்தேக நபர்களை அதிகாலையே பிணையில் எடுத்துள்ளார் என்றும் ஆனால் இதுவரை பணம் செலுத்தப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.