வித்தியா கொலை வழக்கில் கைதான ஒருவரின் இன்றைய நிலை

வித்தியா கொலை வழக்கில் கைதான ஒருவரின் இன்றைய நிலை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகளில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் கொலை தொடர்பில் முதலாவது சந்தேகத்துக்குரியவரான புங்குடுதீவினைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, தாம் வெளியில் வந்து தம்மை கைது செய்த ஊர்காவற்றை காவல்துறை உத்தியோகத்தை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார் மீது பிறிதொரு வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் நிறைவடையவில்லை என காவல்துறையினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குறித்த சந்தேகத்துக்குரியவரை இந்த மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும், அதுவரை இந்த வழக்கை ஒத்திவைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார்.