கொழும்பில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!! அனைவரின் கவனத்திற்கும்

கொழும்பில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!! அனைவரின் கவனத்திற்கும்

அசையா சொத்துக்கள் பிரிவில் மேம்பாட்டை கண்காணிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் பல சுட்டெண்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1998ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் காணிகள் தொடர்பான விலைச்சுட்டென் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சுட்டெண்கள் தயாரிப்பில் மதிப்பீட்டுத்திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 5 கொழும்பு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையிலான 50 பிரதேசங்களில் காணி விலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது காணி பயன்பாடு குறித்த விடயங்களை கவனத்தில் கொண்டு இருப்பிடம் அல்லாத வர்த்தகம் மற்றும் கைத்தொழில் துறை காணிகள் ஆகியன தொடர்பில் 3 சுட்டெண்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த 3 சுட்டெண்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் காணிகளின் விலைச்சுட்டென் தயாரிக்கப்படக்கூடும்.

கொழும்பு மாவட்டத்தில் காணிகள் தொடர்பான விலை சமீபகாலத்தில் அதிகரித்துள்ளமையை வெளிப்படுத்தி காணிவிலைச்சுட்டெண் 2017ஆம் ஆண்டு ஜுன் மாத நடுப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12.6 சதவீத்தினால் அதிகரித்துள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.