கடும் காற்­றுடன் இன்று கனமழை.!

வட அந்­த­மானில் ஏற்­பட்ட குறைந்த வலு­வான தாழ­முக்­கத்தின் தொட­ராக வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கை திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து 850 கிலோ­மீற்றர் தூரத்­தி­லேயே இன்று பய­ணிக்­கின்­றது.

இது கடலின் வடக்கு திசையில் இந்­தி­யாவை நோக்கி பய­ணிப்­பதால் இன்று இலங்­கை­யிலும் இடி­மின்­ன­லுடன் கூடிய மழை எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது என அனர்த்த முகா­மைத்­துவ நிலை­யத்தின் பணிப்­பாளர் நாயகம் பிரேமலால் தெரி­வித்தார்.

நேற்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வட அந்­த­மானில் ஏற்­பட்­டுள்ள குறைந்த வலு­வான தாழ­முக்­கத்­தினால் ஏற்­பட்ட கடுங்­காற்று இன்று இலங்கை திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து 850 கிலோ­மீற்றர் தூரத்தில் வடக்கு நோக்கி மணிக்கு 90 கிலோ­மீற்றர் வேகத்தில் பய­ணிக்­கின்­றது. வட- கிழக்கு பகு­தியில் இருந்து 300 கிலோ­மீற்றர் தூரத்­தி­லேயே அதி­க­ள­வான காற்று காணப்­ப­டு­கின்­றது. அதி­லி­ருந்து கரை­யோர பகு­திகள் வரையில் 50 தொடக்கம் 60 கிலோ­மீற்றர் வேகத்­தி­லேயே காற்றின் வேகம் காணப்­படும்.

இந்த காற்றின் வேகம் இடை­யி­டையே மாறு­வ­தற்கும் வாய்ப்­புள்­ளது. இந்த கடுங்­காற்­றினால் ஏற்­படும் அதி­க­ள­வான தாக்கம் கடற்­ப­ரப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

மேலும் இன்று மேல், சப்­ர­க­முவ, மத்­திய மாகா­ணங்­க­ளிலும் மற்றும் வட அம்­பாறை பிர­தே­சத்­திலும் குறைந்த வலு­வு­டைய காற்றின் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லைமை சில நேரங்­களில் கடு­மை­யா­கவும் கூடும். சில நேரங்­களில் தாக்கம் இல்­லா­மலும் இருக்கும் தன்­மை­யுள்­ளது.

இந்த காற்றின் வேகம் முதலில் குறைந்த அழுத்தம் கொண்­ட­தா­கவும் பின்னர் சற்று அழுத்தம் அதி­க­ரித்து பின் கடும் நிலையை அடையும் வகை­யிலும் உள்­ளது. இதனால் இது கடற்­ப­ரப்பில் மேலெ­ழுந்து அலை உரு­வாகும் நிலை காணப்­ப­டு­கின்­றது. இதனால் மின்­ன­லுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்­புண்டு.

இப்­ப­டி­யான ஒரு சம்­ப­வமே 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பதி­வா­கி­யது. அப்­பொ­ழுது பெய்த கடும் மழையால் அதிக மரணம் சம்­ப­வித்­தது. இதனால் இம்­முறை பொது மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும். கடுங்­காற்று இந்­தி­யாவை தாக்கும் பட்­சத்தில் இலங்­கை­யி­லிம் ஒரு வறட்சி நிலை உரு­வாகும் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

நாடு பூரா­கவும் ஒரு மந்­த­க­ர­மான நிலைமையும் விட்டு விட்டு மழையும் இடி மின்னலுடன் கூடிய மழையும் எதிர்பார்க் கப்படுவதாலும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரையில் பொதுமக்கள் மிக அவதா னத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள் ளப்படுகின்றனர் என்றார்.