மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

ஒலுவில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் (வயது-33) என்பவரே காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.