இலங்கை காலநிலையில் திடீர் மாற்றம்

நாட்டில் வட மத்திய, கிழக்கு, ஊவா, மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

குறிப்பாக மேற்கு ,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி ,மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு மேலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேற்கு ,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலைவேளைகளில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.