லசந்தா கொலை வழக்கில் பரபரப்பு!! முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது!!

ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலை குறித்து கல்கிஸ்ஸ பிரதேசத்தில் பொறுப்பாகயிருந்த முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் பிரசன்ன நானயகார கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றவியல் தடுப்பு பிரிவினால் நேற்று இரவு பிரசன்ன நானயகார கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உடகவியலாளரான லசன்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானார்.