கொழும்பு பகுதியில் பாரிய கட்டிடம் இடிந்தது! ஆபத்தான நிலையில் பலர்..

கொழும்பு - கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 3.1மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழந்துள்ள நிலையில் , இதில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்குண்டுள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் காவற்துறையினரால் ஈடுபட்டு வருகின்றனர்.