குழந்தைகளைக் குறிவைக்கும் வைரஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒருவித வைரஸ் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸினால் சிறுவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், கடந்த மாதத்தில் மாத்திரம் 5 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட பலர் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் இருந்து கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பிறந்து 6 மாதங்களேயான குழந்தைகளும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டன.

கடுமையான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம் ஆகியன இந்த வைரஸ் நோய்க்கான அறிகுறி எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.