விஸ்வமடு மக்களுக்காக களத்தில் குதித்த வீரவங்ச

தேசிய ஒற்றுமைக்கு புதிய அணுகுமுறையொன்றை பெற்று கொள்ள விஸ்வமடு மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்துவிற்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

விமல் வீரவங்ச, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்வை வழங்குமாறு அந்த கடிதம் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு - விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ – சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவர், விஸ்வமடு பகுதியில் இருந்து வெளியேறும் போது, மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.