Sri Lanka

அமீர் அலியின் தூண்டுதலில் தமிழர்களுக்கு எதிராக ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழர்களுக்குஎதிரான எதிர்ப்புப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கலந்துகொண்டர்.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள் அரசியலுக்காக இனவாதத்தைத் தூண்டாதே, இனவாதம் பேசி அரசியல் வளர்க்காதே, ஒற்றுமையாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் உறவில் தமிழ் கூட்டமைப்பு பிளவை ஏற்படுத்தாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி வந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (18.01.2013) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத செயற்பாட்டினைக் கண்டித்து ஜும்ஆத் தொழுகையின் பின் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளை ஏற்பாடு செய்திருந்த இந்தக் கண்டணப் பேரணியில் கல்குடாத் தொகுதியில் உள்ள 19 ஜும்ஆப் பள்ளிவாயல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மேற்கு செயலகப் பிரிவுக்கு சொந்தமான 05 கிராம சேவகர் பிரிவுகள் தற்காலிகமாக கிரான் பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டதை மீண்டும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைத்துத் தருமாரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவு வர்த்தகமானியில் அறிவிக்கப்படாமையால் பல பிரச்சினைகள் உள்ளதால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை வர்த்தகமானியில் அறிவிப்பதோடு அதற்கான பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என கோரி தனித்தனி மகஜர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு விலாசமிடப்பட்டு ஒப்படைப்பதற்காக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் ஆகியோரிடம் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடாக் கிளை பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.

பிரதேச செயலகத்திற்கு கிராம சேவகர் பிரிவைப் பெறுவதற்கு தடை விதித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரை கையளிக்கும் நிகழ்வுகளில் கல்குடாத் தொகுதியில் உள்ள பத்தொன்பது ஜும்ஆப் பள்ளிவாயல்களில் இருந்தும் ஜும்ஆத் தொழுகை முடிந்தவுடன் பேரணியாக வந்த மக்கள் கோறளைப்பற்று மேற்கு செயலகத்திற்கு முன்பாக வந்து மகஜரை கையளிக்கும் நிகழ்வின் பின் கலைந்து சென்றனர்.



Most Popular News