இரண்டு கிலோகிராம் மான் இறைச்சியை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை இராஜாங்கனை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஹொருவில கட்டப்பொத்தேவ பகுதியிலுள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, குளிர்சாதனப்பெட்டியிலிருந்து மான் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டார விஜேகோனின் ஆலோசனைக்கமைய இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.