பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இலங்கையை இடைநிறுத்துவதற்கான நேரம் இதுவென சேர் ரொனால்ட் சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுமே அமைப்பின் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருக்கவேண்டிய நிலையில் இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தற்போது பாரதூரமாக மீறியிருப்பதாக சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாயத்தின் விதிமுறைகளின் பிரகாரம் அந்த அமைப்பின் இவ்வாறு விதிமுறைகளை மீறிச் செயல்படும் தரப்பை பொதுநலவாய ஒன்றியத்தின் பேரவையிலிருந்து இடைநிறுத்துவது முதலாவது நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது