பல்கலைக்கழக பட்டதாரிகள், உயர்தரம் சித்திபெற்றவர்கள் மற்றும் சட்டக்கல்லூரிக்குச் சென்று கொப்பி அடித்து சித்திபெற்று பிரயோசனமற்ற டிப்ளோமா பெற்ற சிலரே இன்று பாராளுமன்றில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
குறைந்தளவு கல்வி கற்று, குறைந்த தகுதிகளுடன், குறைந்தளவு கஸ்டப்பட்டு அதிக பணம் கிடைக்கும் வியாபாரமாக பாராளுமன்றை சிலர் மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி விஜயகுமாரதுங்கவின் நினைவு தினத்தையொட்டி கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.