Sri Lanka

ஐ. நா. மனித உரிமையின் 22வது கூட்டத் தொடருக்கான அறிக்கை! ச.வி.கிருபாகரன்

பிரான்ஸில் இயங்கி வரும் தமிழர் மனித உரிமை மையத்தினர், ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ. நா. மனித உரிமை சபையின், 22வது கூட்டத் தொடரின் தலைவர், மனித உரிமை ஆணையாளர், ஐநாவின் முக்கிய புள்ளிகள், இராஜதந்திரிகள், சர்வதேச அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் ஆகியோரின் கவனத்திற்கு, அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.
இவ் அறிக்கை, ஆங்கிலத்தில் ”இலங்கையும் சர்வதேச சட்டங்களும்” என பெயரிடப்பட்டு, அறிக்கையின் உறையில் (கவர்) ஓர் தராசு, சர்வதேச சட்டமும், இலங்கையின் போர் குற்றங்களும் சமனற்று நிற்பதை மிக இலகுவாக விபரிக்கப்பட்டுள்ளதுடன், அத் தராசை சர்வதேச சமுதாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏந்தி பார்வையிடுவது போல் காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை, இலங்கை எவ்வகையில் சகல சர்வதேச சட்டங்களையும் மீறி – இனப்படுகொலை, போர்க்குற்றம், காணாமல்போதல், பாலியல் வன்முறைகள், தடுப்புக்காவல், மனிதாபிமானம் அற்ற பல செயற்பாடுகளை செய்ததுடன், தொடர்ந்து செய்து வருகின்றது என்பதை ஆணித்தரமாக காண்பிக்கிறது.

அத்துடன் மிக நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட, இலங்கை பற்றிய சகல அறிக்கைகளும் அடங்கிய சில இணையத்தள இணைப்புகளும் இவ் அறிக்கையில் அடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் மனித உரிமை மையத்தினரின் அறிக்கையின் முடிவுரையில், பல தசாப்தங்கள் தொடர்ந்து இலங்கை இவ்வளவு தூரம் சர்வதேச சட்டங்களை மீறி வருகின்ற பொழுதிலும், இன்று வரை ஐ. நா. பாதுகாப்புச் சபை இலங்கை மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லையென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையின், உறை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழர் மனித உரிமை மையத்தினரின் அறிக்கையியை பார்வையிட கீழே அழுத்தவும்

http://www.tchr.net/reports_commission.htm

நன்றி

ச. வி. கிருபாகரன்
பொதுச் செயலாளர்
தமிழர் மனித உரிமைகள் மையம்
பிரான்ஸ்

51 total views, 1 views today