Sri Lanka

ஜனாதிபதி செயலணி புள்ளித்திட்டத்தின் கீழ் மீள்குடியேறியோருக்கு வீடு

‘ஜனாதிபதி செயலணியினால் வழங்கப்படும் புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் மீள்குடியேறிய மக்களுக்கான வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதன் அடிப்படையில் 10 புள்ளிகளுக்கு மேல் பெறுபவர்கள் வீட்டுத் திட்டத்துக்கு உள்வாங்கப்படுவர்’ என்று வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கதிரமலைநாதன் பரந்தாமன் தெரிவித்தார்.

‘இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களுக்கு ஜனாதிபதி செயலணியின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் மூன்றாம் கட்டத்தில் வீடுகள் வழங்கப்படும். அதில் நாம் செய்வதற்கு எதுவும் இல்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘மின்சாரம் இல்லாத பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பிரதேச செயலக மட்டத்தில் நிறைவு பெற்று அதற்குரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு அதனை வழங்கும் நடவடிக்கைகள் வின்சவிய திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

பின்னர் அவை நிறுத்தப்பட்டுள்ளதால் காணி கச்சேரிகள் மூலம் நெடுங்கேணி பிரதேசத்தின் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏனையோருக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

78 total views, 4 views today