இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஐநா பொதுச் செயலாளரின் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் கருத்து தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரம் தொடர்பிலேயே ஐநா சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.