Sri Lanka

உஷார்… செங்கல் லொறியுடன் விற்பனைக்கு முக்கிய சந்திகளில் நிற்பவர்கள்…

எப்பொழுதும் அம்பாறை செங்கல்களுக்கும் நைனாக்காடு செங்கல் கற்களுக்கு தனிக்கிராக்கி உள்ளது.

இதனால் ஏதாவது கட்டடம் கட்டுவதற்கு அவ்விசரத்திற்கு செங்கல் கிடைக்காமல் இருப்பதும் சிலவேளை இவர்களை தொடர்பு கொள்ளமுடியாமல் திண்டாடுவதும் பலதடவை அவதானித்துள்ளோம்.

அதற்காக நைனாக்காடு அம்பாறை செங்கலை ஏற்றிக்கொண்டு லொறியும் தரகர்களும் தயார்நிலையில் கல்முனை பாபுஜீஸ், களுவாஞ்சிகுடி, துறைநீலாவனை மருதமுனை சந்திகளில் காணப்படுவார்கள் இவர்களில் பலர் பலதில்லுமுல்லுகள் செங்கல்தயார்நிலையிலுள்ள முஸ்லிம் லொறிக்காரர்கள் பலரை ஏமாற்றிய சம்பவம் உள்ளது அதில்ஒரு சம்பவம்.

சம்மாந்துறையில் செங்கல்விற்பனைக்காக அம்பாறையில் இருந்து வந்து சம்மாந்துறையில் செங்கல்லினை வாங்கி தங்களது வாகனத்தில் பழுதுஉள்ளது அதனால் கல்லினை விலை குறைத்து தருகிறோம் என்று பொய்சொல்லி பாமரமக்களை ஏமாத்தி குறைந்த எண்ணிக்கை கற்களை மிகவும் சூழ்ச்சி தனமாக அடுக்கி அதிக (கற்களாக) எண்ணிக்கையாக எண்ணிக்கையை காட்டி மிகவும் லாவகமாக எம்மவர்களின் அதிக பணங்களை சுருட்டிகொள்ளும் மிகப்பெரிய கொள்ளைகூட்டம் தற்போது உலாவுகிறது .

எனவே அனைவரும் அவதானமாக இருங்கள் அல்லது இவர்களிடம் கல் வாங்குவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் 5500 கல்லினை 8000 கற்களாக மிகவும் சூழ்ச்சிதனமாக அடுக்கி கணக்கும்காட்டி எமது பணத்தை கொள்ளையிடுகிறார்கள் லாபம் என்று நம்பி அதிகபனத்தை இழந்துவிடாமல் இருக்க இதை எம்மவர்களுக்கு தெரிவித்துவிடுங்கள் அப்பாவிகளுக்கு விளிப்புனைவைகொடுங்கள்.

அண்மையில் எறுவில் பிரதேசத்திலும்,நாவிதன்வெளி பிரதேசத்திலும் ஒரு வறிய பெண்ணிடம் இவர்கள் ஏமாற்று சூழ்ச்சியை காட்டிவிட்டனர் இறைவன் அருளால் நாங்கள் அதிகமானவர்கள் கற்களை அடுக்கும்போது மிகவும் அவதானமாக நின்று கற்களைகணக்கெடுத்து உரிய கற்களுக்கு மட்டும் பணம் வழங்கினோம் இதனால் எனது 16500/- பணம் பாதுகாகபட்டது இந்த நிகழ்வின்பின்னர்தான் இவர்கள் பற்றிய தகவல்கிடைத்தது .

அதனால்தான் இதை ஏனையோரும் இவர்கள்பற்றி அறிந்திருந்தால் அல்லது தெரியவைத்தால் அவதானமாக இருப்பார்கள்…kail

kail01

kail02

Most Popular News