Sri Lanka

இலங்கையில் நெடுஞ்சாலை ஒப்பந்தத்தை இரத்து செய்தது ஜப்பானிய நிறுவனம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜப்பானிய நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீள பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்காக மற்றுமொரு நிறுவனத்தை அரசாங்கம் தேடிவருவருகின்றது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையானது மூன்று கட்டங்களாக நிர்மானிக்கப்படவுள்ளது.

கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான முதல் கட்டத்தை சீனா நிறுவனம் ஒன்று நிர்மானித்து வருகின்ற நிலையில், இரண்டாவது கட்டமான குருநாகலில் இருந்து பொடுஹெர வரையிலான நிர்மான பணிகளை உள்நாட்டு நிறுவனமொன்று பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் மீதமுள்ள பொடுஹெரவிலிருந்து கண்டி வரையிலான நிர்மான பணிகளுக்காக ஜப்பானிய நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீள பெற்றுக்கொண்டதால், புதிய நிறுவனமொன்றை அரசாங்கம் தேடி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular News