Sri Lanka

தில்ருக்ஷி பலர் இராஜினாமா; குழப்பத்தில் மைத்திரியின்

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முடிவை இன்று அறிவிக்கவுள்ளார்.

ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றிருந்ததால் தில்ருக்ஷி டயஸினால் நேற்று அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் பொறுப்பேற்றிருந்தார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தமது விசாரணைகளில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்ற விசாரணைக்கு அழைத்திருந்தமை தொடர்பிலும் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்களை தொடர்ந்து இலஞ்ச ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அத்துடன் சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்களும் எதிர்வரும் சில தினங்களில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவும் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் சம்பவத்தால் மைத்திரி சற்றுக் குழம்பியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன….ms1

Most Popular News