Sri Lanka

மரணத்திற்கு பின் என்னதான் நடக்கிறது? வாழ்க்கை உள்ளதா? அறிவியல் என்ன சொல்கிறது

மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக, நாகரீகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன.

மரணம்தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம்-நரகம் என்பது கிடையாது.மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே.மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையானது. கட்டுக்கதை அது. மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவ டாக்டர்கள் இணைந்த குழு மருத்துவபரிசோதனை மூலம் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளனர். மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது என கண்டறிந்து உள்ளனர்.

இந்த வியப்பூட்டும் அறிவிப்பு எனபது மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டது.

இந்த சர்சைக்குரிய ஆய்வு கடந்த 4 ஆண்டுகளாக இறக்கும் தருவாயில் உள்ள 944 பேர் மீது முக்கிய மருந்து கலவைகள் கொண்டு நடத்தப்பட்டு உள்ளது.எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ரீ அனிமேசன் முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்கு, அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. டாக்டர் பெர்தோல்டு ஆக்கர்மேன் மற்றும் அவரது குழுவினர் அதன்பின்னரான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தொடங்குகின்றனர்.

அவற்றின் வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர். இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் (சி.பி.ஆர்). என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. அதன் உதவியுடன் இது சாத்தியப்படுத்தப்பட்டது.

கடந்த சில வருடங்களில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் பற்றிய விசயங்கள் எதுவும் இல்லை.

தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சி அடைய செய்யும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுக்கு எடுத்து கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

ஆனால் மனிதகுல வரலாற்றின் பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால் மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என ஆக்கர்மேன் கூறி உள்ளார்.

இது போல் டாக்டர் ரேமண்ட் மூடி (Dr. Raymond Moody) 1975 ஆம் ஆண்டு எழுதிய “வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை” (Life after Life) என்ற புத்தகம் வெளியான பின்பு தான் இதன் ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது. இவர் இந்த நூலுக்காக 150 தனிநபர்களின் அனுபவங்களை பயன்படுத்தினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்றுபட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார்.

* ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.

* கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலை பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாக தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்கள்.

* மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்த கணத்தில் குறித்த வலி மறைந்து விடுவதோடு பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

* பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்கவழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.

* சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது “கார்ல் ஜங்” அனுபவத்தோடு ஒத்துப் போகின்றமை குறிப்பிடத்தக்கது.

* சுரங்கவழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியில் அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்யிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களையும், நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.

* ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியை பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும் போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்)

* அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காணகூடியதாகவும் அமைந்ததாம்.

* அந்த தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னம் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாக சிலரும் தெரிவித்திருக்கின்றனர். scientists-prove

Most Popular News