Sri Lanka

செம்சுங் கெலக்ஸி போன்களுக்கு மிஹின் மற்றும் ஸ்ரீ லங்கன் விமானங்களில் தடை

செம்சுங் கெலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன்களை மிஹின் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான ங்களில் தடைசெய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமானச் சேவை நிர்வாகமே இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இத்தடை உடனடியாக அமுலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி பயணிகள் செம்சுங்கின் கெலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை குறித்த விமான ங்களில் கொண்டு செல்லமுடியாது.

செம்சுங் கெலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன்கள் வெடிக்கின்றமை சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த து. இதனையடுத்து குறித்த ஸ்மார்ட் போன் தயாரிப்பினை செம்சுங் நிறுத்தியது.

பலநாடுகள் , விமான நிறுவனங்கள் இதனை தடைசெய்திருந்தன.

இந்த நிலையில் ஸ்ரீ லங்கன் நிறுவனமும் பாதுகாப்பைப் கருத்தில் கொண்டு குறித்த ஸ்மார்ட் போன்களை தடைசெய்துள்ளது.

Most Popular News