Sri Lanka

குமார வெல்கமவின் வீட்டில் விசேட பொலிஸ் பிரிவினர் சோதனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் வீட்டை விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.

குண்டு துளைக்காத அரச வாகனங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரின் மத்துகம, ஹொரவலயிலுள்ள வீட்டிலேயே சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்களை வீட்டில் வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாட்டிற்கு அமைய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் மத்துகம, ஹொரவலயிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் கடும் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

எனினும் இந்த சோதனை நடவடிக்கையின் போது அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு வாகனத்தையும் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினர் மீட்கவில்லை என குமார வெல்கமவின் ஊடக செயலாளர் கூறியுள்ளார்.kumar

Most Popular News