Sri Lanka

குளியல் அறையில் 4 நாட்கள் சிக்கி தவித்த 86 வயது பாட்டி

இங்கிலாந்தை சேர்ந்தவர் டோரீன் மான் என்ற 86 வயது பாட்டி, அவர் வீட்டு குளியல் அறைக்கு குளிக்கச் சென்றுள்ளார். ந்த்ர்பாராத விதமாக அவரால் குளியல் தொட்டியிலிருந்து எழுந்திருக்க முடியவில்லை.

அவருடைய கால்களை அசைக்க முடியவில்லை. அவர் தனிமையில் அந்த வீட்டில் இருந்து வந்ததால் அவரால் அடுத்தவர்கலீடம் முதவி கேட்கவும் முடியவில்லை.அவரைப்பற்றி உடனடியாக அறிந்து மீட்கவும் யாரும் வரவில்லை.

இவ்வாறு நான்கு நாட்களாக குளியலறையிலேயே டீரீன் இருந்துள்ளார். தண்ணீரில் உடல் ஜில்லிட்டு போகாமல் இருக்க சுடுநீரை அவ்வப்போது, நிரப்பிக்கொண்டுள்ளார்.

வழக்க மாக் அவர உணவருந்த செல்லும் கடையில் வேலைபார்க்கும் சசோனியா காங்ராவ் இவரை பற்றி விசாரித்து உள்ளார்.இரண்டு நாட்களாக அவர் மதிய உணவுக்கோ அல்லது ஒயின் அருந்தவோ இங்கு வரவில்லையே என விசாரித்துள்ளார்.

பின்னர் சோனியா முயற்சியால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு டோரீன் மீட்கப்படுள்ளார்.bath-room

Most Popular News