Sri Lanka

பிளஸ் வரிச்சலுகையை ஸ்ரீலங்கா மீளப் பெறும் வாய்ப்பு – டொனால்ட் டஸ்க்

ஸ்ரீலங்காவில் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புக்கள் ஜி.எஸ்.பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொள்வதற்கான நிலைக்கு ஸ்ரீலங்காவை கொண்டுசென்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸிற்கு விஜயம்செய்துள்ள ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் அதன் தலைவர் டொனால்ட் டஸ்க்குடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தத் தகவலைக் கூறியிருக்கின்றார்.

நான்கு நாள் விஜயமாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று பெல்ஜியத் தலைநகர் பிரசல்சிற்கு விஜயம் செய்துள்ளனர்.

தீவிரமடைந்திருந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பொறுப்புக் கூறலை நிறைவேற்றத் தவறியமை ஆகியவற்றை முன்வைத்து மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிகாலமான 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஸ்ரீலங்காவிற்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இரத்துச் செய்திருந்தது.

இதனால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை அடுத்து ஆட்சிபீடம் ஏறிய மைத்ரி – ரணில் அரசாங்கம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.

இதன் இறுதி முயற்சியாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரசல்ஸிற்கு சென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்குடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் முக்கிய பிரதிநிதிகளும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் அலுவலக பிரதானயான சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உட்பட உயர்மட்டத் தூதுக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

இதன்பொது சர்வாதிாரத்திலிருந்து நாட்டை மீட்டுள்ள தற்போதைய அரசாங்கம், ஊழல் மோசடிகள், அச்சுறுத்தல்கள், இல்லாத நாட்டை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தி நல்லாட்சியை உறுதிப்படுத்துவதில் உறுதியாக செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இறுதிக்கட்ட போரின் போதும், அதற்குப் பின்னரும் இடம்பெற்ற போர் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்த மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் டொனால்ட் டஸ்ட்டிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அது மாத்திரமன்றி புதிய அரசியல்யாப்பு தயாரிப்புப் பணிகள், நல்லிணக்கப் செயற்பாடுகள் குறித்தும் ஸ்ரீலங்கா பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமரின் இந்த விளக்கங்களை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க்குடன், ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வதாக உறுதியளித்திருக்கின்றார்.eu

eu01

eu02

Most Popular News