Sri Lanka

கர்ப்பிணி வேஷம் போட்ட இலங்கை அனகொன்டா!!

கேரள மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் கர்ப்பிணியாக நம்பப்பட்ட ஒரு பெண் அனகொன்டா பாம்பு பேறுகாலம் நெருங்கியும் குட்டி போடாததால் வனவிலங்கு காப்பக அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வனவிலங்கு காப்பகத்தில் இலங்கையில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட ஏழு அனகொன்டா பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்று ஆண், மற்ற ஆறும் பெண் பாம்புகள் ஆகும்.

இங்குள்ள ஆண் அனகொன்டாவுடன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட ஒரு பெண் பாம்பு, சமீபகாலமாக பத்து கிலோ அளவுக்கு உடல் எடை கூடி, ஒருவித மாற்றத்தோடு ‘பளபளப்பாக’ காணப்பட்டதால் அது கருவுற்றிருப்பதாக வனவிலங்கு காப்பக அதிகாரிகள் கருதினர்.

ஏஞ்சலா என பெயரிடப்பட்டுள்ள அந்த அனகொன்டா விரைவில் குட்டிகளை போடும் என கருவுற்ற நாளில் இருந்து பிரசவகாலமான ஏழாம் மாதம்வரை அவர்கள் காத்திருந்தனர்.

தற்போது 65 கிலோ எடையுள்ள ஏஞ்சலா, ‘சாப்பிட்டோமா?, விளையாடினோமா?, தூங்கினோமோ?..’ என்றிருந்ததேயொழிய, எட்டுமாதம் நெருங்கியும் குட்டி போடுவதாக தெரியாததால் சமீபத்தில் அதை ஸ்கேன் செய்துபார்த்த அதிகாரிகள், அது இன்னும் கருத்தரிக்கவே இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

மனிதர்களிலும் சில பெண்களுக்கு தோன்றும் ‘பொய்க் கர்ப்பம்’ போல் இந்த அனகொன்டாவுக்கும் நேர்ந்திருந்ததாக கூறும் வனவிலங்கு காப்பக மருத்துவர்கள், ஏஞ்சலாவின்அடுத்த இனச்சேர்க்கை பருவத்துக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.anaconda

Most Popular News