Sri Lanka

மதம் மாறினாரா ஆனந்தராஜ்? உண்மை வெளியாகியது….

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக நடித்து வருபவர் ஆனந்தராஜ். வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் கலக்குபவர்.

ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை பல தலைமுறைகளைக் கண்டவர்.

அண்மையில் விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் பட த்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், ஆனந்தராஜ் மதம் மாறி விட்டதாக கூறி படமொன்று இணையத்தில் வெளியாகியிருந்தது.

இதுமட்டுமன்றி சமூகவலைதளங்களிலும் அது தீயாக பரவிவந்தது. இது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பில் விசாரித்த போது அத்தகவல் உண்மையில்லை என தெரியவந்தது.

நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் அது. முண்டாசுப்பட்டிக்கு பிறகு நடிகர் ஆனந்த் ராஜுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் அதில் தெரிவித்துள்ளார்.

இது விஷமிகள் சிலரின் விளையாட்டே என தற்போது தெரியவந்துள்ளது.aanadaraj

aanadaraj001

Most Popular News