Sri Lanka

பாம்பினை உணவாக உட்கொண்ட கூலித் தொழிலாளியின் பரிதாப நிலை!

கூலித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிருகங்களின் தாக்குதல் காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகுவது அதிகமாகும்.

அவ்வாறு கேகாலை பிரதேசத்தில் கூலித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளியை பாம்பு கொத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தன்னை கொத்திய பாம்பின் ஒரு பகுதியை உணவிற்கு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் குறித்த நபர், பாம்பு கொத்தியமையினால் பின்னர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் அந்த பாம்பை பிடித்து தனது சாரத்தில் சுற்றி வைத்திருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்களில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலத்திற்கு அருகில் பாம்பின் உடற்பாகங்களும் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பிரதேச மக்கள் அறிவித்ததனை தொடர்ந்து கேகாலை வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular News