Sri Lanka

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு டிசம்பர் 5 வரை விளக்கமறியல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் 3 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Most Popular News