Sri Lanka

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்ட காலத்தில் பல அலுவலகங்கள் முறையாக திறக்காத நிலையில் பொதுவான் வரவுப்பதிவேட்டில் கையழுத்திட்ட பயிலுனர்களின் கொடுப்பனவானது ஏனைய பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டுள்ளபோதும் யாழ்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படவில்லை, கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் அசமந்தபோக்கில் காணப்படுகின்றன,

நிர்வாகத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பாராபட்சமும், நிர்வாகமுறைகேடுகளும் தடுக்கப்பட வேண்டும், ஊழியர்களின் தவறான உள்ளக சம்பள கணிப்பீடு தொடர்பில் 2013 ஆம் ஆண்டிலிருந்து சுட்டிக்காட்டியபோதும் கவனம் செலுத்தாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ja1

ja2

Most Popular News