Sri Lanka

யாழ் தீவுகளுக்கிடையே சீரான பயணிகள் போக்குவரத்து

யாழ். தீபகற்பத்தில் அமையபெற்றுள்ள தீவுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்தினை சீரான முறையில் மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா கடற்படையின் ழுமையான ஆதரவினை வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிக்காட்டலுக்கு அமைய இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்பாண தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகள் மற்றும் கட்டடங்களை நிர்மாணிக்கும் பொருட்டு கடற்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் கரையோர பயணிகள் போக்குவரத்து சேவையின்போது, பயணிகள் போக்குவரத்தின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற படகுகளின் தரத்தினை பேணுதல், தீவுகளிற்கருகாமையில் படகுதுறைகளை நிர்மாணித்தல், மக்களின் பாதுகாப்பினை உறுதிச்செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

யாழ். தீவகங்களிற்கிடையே சீராண பயணிகள் போக்குவரத்தினை முன்னெடுக்கும் பொருட்டு அரசாங்கம் 50 மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் ‘யாழ்பாணம் மற்றும் தீவுகளிற்கிடையே பாதுகாப்பான பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தினை முன்னெடுக்கும் பொருட்டு படகுதுறைகளை அபிவிருத்திச் செய்தல்’ எனும் தலைப்பின் கீழ் அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார்.

யாழ் தீபகற்பத்தில் அமையப்பெற்றுள்ள 11 தீவுகளில் குறிக்கட்டுவான், நாகதீபம், நெடுந்தீவு, அனலைதீவு, எலுவைதீவு, புங்குடுதீவு, மற்றும் காரைநகராகும். ஆகிய 7 தீவுகளில் மாத்திரமே மக்கள் வாழ்வதோடு, ஒரு சில தீவுகளிற்கிடையே தரைவழி போக்குவரத்து காணப்பட்ட போதிலும் ஏனையவற்றிற்கு கடல் வழி போக்குவரத்தே இன்று வரையில் காணப்படுவதாக அந்த பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய காலம் தொட்டு பயணிகள் படகுகள் மற்றும் படகுதுறைகளில் காணப்படுகின்ற தொழில்நுட்ப கோளாருகள் காரணமாக மிகவும் ஆபத்தான முறையிலேயே குறித்த தீவுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலைமையினை சீர்செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், இதன் முதற்கட்டமாக யாழ்பாணம் சுருவில் பகுதியில் படகுகளின் தொழில்நுட்ப தரத்தினை பரிசோதிக்கும் பொருட்டு படகு திருத்தும் நிலையத்தினை நிர்மாணிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், வணிக கப்பற் செயலகத்தின உப அலுவலகமொன்றினை ஊர்காவற்றுறையில் திறப்பதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுமை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்துள்ள அமைச்ரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.tevu

tevu01

Most Popular News