Sri Lanka

தேசிய மட்ட கபடி வீரரின் இளம் மனைவி தற்கொலை

இந்திய தேசிய கபடி வீ ரர் ஒருவரின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கபடி வீரரான ரோஹித் சில்லாராவின், 27 வயதான மனைவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உளவியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களே முடிவுக்கு காரணமென அப்பெண் இறக்கும் முன்னர் பதிவு செய்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களையே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறித்த பெண்ணின் இரண்டாவது திருமணம் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாமனார் அவரை அடிக்கடி இதைச் சொல்லிக்காட்டி காயப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சீதனம் கேட்டு கொடுமைபடுத்தியதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் தூக்கில் தொங்கியே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்போது ரோஹித்தை பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
1476877318_9335055

Most Popular News