Sri Lanka

நுகேகொடையில் சற்று பதற்றம் – பொலிஸார் வரவழைப்பு

நுகேகொடையில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருகைத் தருவோரின் எண்ணிக்கை ஏனைய நாட்களை விட இரு மடங்கு அதிகரித்து காணப்படும் நிலையில் இன்று நிலைமை சற்று கட்டுங்கடங்காமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் குறித்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சான்றிதழ்களை பெறுவதற்காக பெருந்தொகையான நபர்கள் நுகேகொடையில் ஒன்றுதிரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular News