Sri Lanka

சற்று முன் முறிகண்டி பகுதியில் பாரிய விபத்து! முழுமையான விபரம் தெரியாது

கிளிநொச்சி முறிகண்டி பகுதியில் இன்று ( 29.11.2016) காலை இ.போ.ச பேரூந்தும் தனியார் பேரூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தினை முறுகண்டியிலிருந்து பரந்தன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து முந்தி செல்ல முற்பட்டவேளை அறிவியல் நகர் பகுதியில் இ.போ.ச பேரூந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் சாரதியின் இருக்கைக்கு அருகே காணப்படும் இருக்கையில் அமர்ந்திருந்த வாயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.murekande

Most Popular News