Sri Lanka

இந்த உலகில் ஆண்களுக்கு பஞ்சம்..! அடுத்த ஜென்மத்திலும் சங்கர் தான் புருஷன்..! தாலிப்பிச்சை கேட்கும் பெண்…

உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யா..மறக்க முடியுமா..? காதலித்த ஒரே காரணத்திற்காக பட்டப் பகலில் ஆயிரம் கூடியிருக்கும் நடு ரோட்டில் துள்ளத்துடிக்க வெட்டிச் சாய்க்கப் பட்டார்..!

கொலைகாரர்கள் சர்வ சாதாரணமாக இரண்டு பைக்குகளில் ஏறி தப்பினர். பின்னர் காவல் துறையினர் கைது செய்தனர். ஒரு சின்ன பிளாஷ்பேக் போய் விட்டு வருவோம்.

திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(22). இவரது மனைவி கவுசல்யா. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்தனர். இதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு காட்டினார்கள்..!

சங்கர் பயந்தபடியே தான் வாழ்ந்திருக்கிறார். பயந்தபடியே மனைவியுடன் உடுமலையில் உள்ள கடைக்கு துணி எடுக்க சென்றபோது நடுரோட்டில் சங்கர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கவுசல்யா படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின் தலையில் ஏற்பட்டிருந்த காயம் ஆபரேஷன் மூலமாக சரி செய்யப்பட்டது.ஆனால் அதன் மூலம் ஏற்ப்பட பாதிப்புகள், தலைவலி போன்ற பிரச்சனைகள் இன்னும் தொடர்கிறது என்கிறார்.

பின்னர் கவுசல்யா கூறுகையில், ‘புகுந்த வீட்டை காப்பதுதான் எனது கடமை. வேலை பார்த்தபடியே பிஇ படிப்பை தொடருவேன். இனி சாகும் வரை சங்கர் தான் என்கணவர். இது தான் எனது குடும்பம்.

கணவரின் இரு தம்பிகளையும் படித்து ஆளாக்குவேன். மாமனாரை வேலைக்கு அனுப்ப விருப்பம் இல்லை. அரசு எனக்கு வேலை தந்து உதவ வேண்டும்.

சங்கர் கொலை செய்யப்பட்டபோது பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான மக்கள் நின்று வேடிக்கை தான் பார்த்தார்கள்.

ஒருவராவது எங்களை தாக்கியவர்களை நோக்கி கல் வீசியிருந்தால்கூட அவர்கள் பயந்து ஓடி இருப்பார்கள். இறைவன் ஆண்களை குறைவாகப் படைத்து விட்டான்.

அன்று அத்தனை கூட்டம் இருந்தும், நானும் என் கணவர் சங்கரும் மட்டுமே தனித்து விடப்பட்டோம். இப்போதும் சங்கர் கொலை செய்யப்பட்ட இடத்தை தைரியமாக கடந்து செல்கிறேன்.

அந்த இடத்தைப் பார்க்க பார்க்கத்தான் என் வைராக்கியம் இன்னும் அதிக மாகிறது. என் அம்மா தன் கணவரை காப்பாற்ற தாலிப் பிச்சை கேட்கிறார். என் கணவரை அவர் திருப்பித் தருவாரா..?

ஆனால், யாரும் எதுவுமே செய்யவில்லை. எதிர்காலத்திலாவது இப்படியொரு துரதிர்ஷ்ட சம்பவம் நடக்க கூடாது’’ என்றார்.

சங்கர் வீட்டுக்கு 2 போலீசார் வீதம், தினசரி 3 ஷிப்ட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.என்ன இருந்து என்ன செய்ய..?வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சங்கர் இன்று உயிரோடு இல்லை..! கொடுமை..!!!

Most Popular News